மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் குரும்பலூரில் சட்ட விழிப்புணர்வு முகாம் :

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், குரும்பலூரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது.

முகாமுக்கு, மாவட்ட எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர்விழி தலைமை வகித்து பேசியது: தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களை தீண்டாமை மற்றும் வன்கொடுமைகளிலிருந்து பாதுகாக்க வன்கொடுமை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டு, உரிய பாதுகாப்பைத் தருகிறது. எந்த வடிவில் வன்கொடுமைகளை ஏற்படுத்தினாலும், அவற்றைத் தடுப்பதற்கும், அதற்கான வழக்கு களை நடத்துவதற்கும் எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்றம் செயல் படுகிறது. பொதுமக்கள் போதிய சட்ட விழிப்புணர்வை அடைந்து, சட்ட பாதுகாப்பைப் பெறுவ தற்காக பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயல்படுகிறது என்றார்.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிமன்ற நீதிபதியுமான லதா முன்னிலை வகித்து பேசியபோது, “பொதுமக்களுக்கான சட்ட உதவிகள் எளிமையாக கிடைக் கும் வகையில் குரும்பலூர் பேரூராட்சியில் சட்ட உதவி மையம் செயல்படுகிறது” என்றார்.

மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கிறிஸ்டி, அரசின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள், பயன்கள், திட்டத்தின் பலனை அடைவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பொதுமக் களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

முகாமில் அனைவருக்கும் சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப் பட்டது. குரும்பலூர் பேரூராட்சி செயல் அலுவலர் தியாகராஜன், வழக்கறிஞர் பகுத்தறிவாளன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்