திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து இரவு வரை பலத்த மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக மணப்பாறையில் 65.40 மி.மீ, நவலூர் குட்டப்பட்டில் 61.40 மி.மீ மழை பதிவாகியது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம்(மி.மீட்டரில்):
திருச்சி ஜங்ஷன் 57, பொன்மலை 56.80, துவாக்குடி 56.20, விமான நிலையம் 55.30, திருச்சி நகரம் 54, மருங்காபுரி 35.40, கோவில்பட்டி 30.20, கொப்பம்பட்டி 20, முசிறி 17.20, லால்குடி 16.40, நந்தியாறு தலைப்பு 15.80, கல்லக்குடி 15.40, வாத்தலை அணைக்கட்டு 15.20, புள்ளம்பாடி 14.60, சமயபுரம் 10.40.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.
தா.பழூர் அருகேயுள்ள காரைக் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சிமணி என்பவருக்கு சொந்தமான 2 ஆடுகள், வாழைக் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சத்தியவாணி என்பவரின் கறவைப் பசு ஆகியவை மின்னல் தாக்கி உயிரிழந்தன. மேலும், மழையின் காரணமாக தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவரின் ஒரு பகுதி நேற்று முன்தினம் இரவு இடிந்து விழுந்தது.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி வரை பதிவான மழையளவு(மி.மீட்டரில்) அரியலூர் 55, திருமானூர் 25.4, ஜெயங்கொண்டம் 20, செந்துறை 51.2, ஆண்டிமடம் 13.
கரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் காற்று, இடியுடன் கனமழை பெய்தது. கரூர், தாந்தோணிமலையில் மரங்கள் சாய்ந்தன.
மாவட்டத்தில நேற்று காலை 8 மணி வரை பதிவான மழைய ளவு(மி.மீட்டரில்): கரூர் 65, க.பரமத்தி 51, அணைப்பாளையம் 37, மாயனூர் 30, பஞ்சப்பட்டி 28.20, கிருஷ்ணராயபுரம் 27, கடவூர் 16, பாலவிடுதி 13.20, அரவக்குறிச்சி மற்றும் தோகைமலையில் தலா 10, குளித்தலை, மைலம்பட்டி தலா 9.
இதேபோல, புதுக்கோட்டை மாவட்டத்திலும் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் நேற்று காலை வரை பதிவான மழையளவு (மி.மீட்டரில்): மணமேல்குடி 85, ஆலங்குடி 74, பொன்னமராவதி 72, ஆவுடையார்கோவில் 68, நாகுடி 67, திருமயம் 66, அரிமளம் 59, ஆயிங்குடி 58, பெருங்களூர் 57, ஆதனக்கோட்டை 51, புதுக் கோட்டை 44, கீழாநிலை 40, காரையூர் 36, குடுமியான்மலை 34, அன்னவாசல் 28, கறம்பக்குடி 25, அறந்தாங்கி 24, மீமிசல் 23, கீரனூர் 22, இலுப்பூர் 20, கந்தர்வக்கோட்டை 19, விராலிமலை 18, மழையூர் 16, உடையாளிப்பட்டி 10.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago