ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியம் : சிறு, குறு விவசாயிகள் பயன்பெறலாம்

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் அறிக்கை:

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிய ஆழ்துளை கிணறு அமைத்து பாசன வசதி ஏற்படுத்திக்கொள்ள அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை வங்கிக்கடன் மற்றும் அதற்கு இணையான 50 சதவீதம் அரசு மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை பின்நிகழ்வு மானியமாக வழங்கப்படுகிறது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க சாதிச்சான்று, இருப்பிடச் சான்று இணைக்க வேண்டும். விண்ணப்பதாரர் சிறு, குறு விவசாயி என்பதற்கான சான்றை வட்டாட்சியரிடம் இருந்து இணைய வழியாக பெற வேண்டும். நில உடமைக்கு ஆதாரமாக கணினிவழி பட்டா மற்றும் அடங்கல் நகல் இணைக்க வேண்டும்.

தகுதியுடைய விவசாயிகள் https://tenkasi.nic.in/forms/ என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தென்காசி - 627 811 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டு ள்ளது.

விண்ணப்பதாரர் சிறு, குறு விவசாயி என்பதற்கான சான்றை வட்டாட்சியரிடம் இருந்து இணைய வழியாக பெற வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்