இதுகுறித்து, வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘‘மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்க தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ரூ.1,500 வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்கு, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் http://scholarshipsgov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை வலைதளம் வழியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் உதவித்தொகை கோரி வரும் நவம்பர் 15-ம் தேதிக்குள்ளும், அனைத்து உயர்கல்வி மாணவர்கள் நவம்பர் 30-ம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு முதன்மை மருத்துவ அதிகாரி, பீடி தொழிலாளர் நல மருந்தகம், குடியாத்தம் அவர்களை 95852-39926 அல்லது மருத்துவ அதிகாரி, பீடி தொழிலாளர் நல மருந்தகம், மேல்விஷாரம் அவர்களை 82200-27879 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago