திருவண்ணாமலை மாவட்டத்தில் - தடையை மீறி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் : பாஜக, இந்து அமைப்புகள் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் என நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்து அமைப்புகள் மற்றும் பாஜக வினர் அறிவித்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தமிழக அரசு விதித் துள்ள கட்டுப்பாடுகளை எடுத் துரைப்பது தொடர்பான கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கரோனா பாதிப்பு ஏறுமுகமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டுதான் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்” என கேட்டுக் கொண்டார். பின்னர், தமிழக அரசு கடந்த மாதம் 30-ம் தேதி பிறப்பித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்து வரிசையாக எடுத்துரைக்கப்பட்டன.

அதன்பிறகு இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் நிர்வாகிகள், தங்களது கருத்து களை தெரிவிக்கும்போது, “விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கடந்த மாதம் 30-ம் தேதிதான் தடை விதிக்கப்படுகிறது. ஆனால், கடந்த 2 மாதங்களாக, விநாயகர் சிலைகளை செய்யும் இடங்களுக்கு அத்துமீறி சென்று, சிலைகளை தயார் செய்யக்கூடாது என மிரட்டி, தயாரிப்பு கூடங் களுக்கு காவல்துறையினர் ‘சீல்' வைத்துள்ளனர். உள்நோக் கத்துடன் காவல்துறை செயல் பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா நடத்தினால் தொற்று பரவி விடும் என கூறுவதை ஏற்க முடியாது. முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதிக்க வேண்டும். இந்துக்கள் பண்டிகைக்கு மட்டும் தடை விதிக்கப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதிப்பதால், விநாயகர் சிலைகளை தயாரித்து விற்பனை செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. வீட்டுக்குள் விநாயகர் சிலையை வைத்து வழிபடுவதற்கு தமிழக அரசின் அனுமதி தேவையில்லை. வெளியே வைத்து வழிபட அனுமதி வழங்க வேண்டும். இல்லையென்றால், தடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும்” என்றனர்.

தடையை மீறினால் நடவடிக்கை

இதைத்தொடர்ந்து ஆட்சியர் பா.முருகேஷ் பேசும்போது, “உங் களது உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. மத்திய அரசு வழிகாட்டுதலின் படியே, தமிழக அரசு விதிகளை கடைபிடிக்கிறது. அரசாங்கம் தனது பொறுப்பை உணர்ந்து தடைவிதித்துள்ளது. உங்களது கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு உடனடியாக கொண்டு செல்லப்படும். விதி களுக்கு உட்பட்டு அனைவரும் செயல்பட்டு, கரோனா பரவலை தடுக்க ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தடைறை மீறி விநாயகர் சதுர்த்தி விழா நடத்தினால், சட்டப்படியான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்கும்” என்றார்.

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்