ஈரோட்டில் கழிவுநீரை வெளியேற்றிய சாய ஆலை மின் இணைப்பு துண்டிப்பு :

By செய்திப்பிரிவு

ஈரோடு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் செயல்படும், சாய, சலவை, பிரிண்டிங் மற்றும் தோல் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து, சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றப்படுகிறதா என மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் பறக்கும் படை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

பூஜ்யநிலைக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை முறையாக பராமரிக்காமல், கழிவுநீரை அருகிலுள்ள கால்வாயில் வெளியேற்றும் தொழிற்சாலைகளின் மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஈரோடு குமிளம்பரப்பு பகுதியில் இயங்கி வந்த ஒரு சாயத் தொழிற்சாலை, அதன் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக இயக்காமலும், சுத்தி கரிக்கப்படாத தொழிற்சாலைக் கழிவுநீரை வெளியேற்றியதற்கானஆதாரங்களும் கிடைத்ததையடுத்து, அத்தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைக் கழிவுநீர் மற்றும் திடக்கழிவுகளை நீர்நிலைகளில் விதிகளைமீறி வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்