கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியைதுரிதப்படுத்துவது குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் நேற்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் பேசியது:
கடலூர் மாவட்டத்தில் தற் போது வரை 40.6 சதவீதம் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தடுப்பூசி மையத்திற்கும் தடுப்பூசி கொண்டு செல்வதை வட்டார மருத்துவ அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். வருவாய்த்துறையின் மூலம் கரோனா தடுப்பூசி நடைபெறும் இடங்களில் தேவையான வசதிகளை ஏற்படுத்த கிராம நிர்வாக அலுவலருக்கு வட்டாட்சியர்கள் அறிவுறுத்த வெண்டும். கிராம உதவியாளர்கள் தண்டோரா மூலம் தடுப்பூசி செலுத்த உள்ளதை விளம்பரம் செய்ய வேண்டும் என்றார். கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ரஞ்ஜித்சிங், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட இயக்குநர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், இணை இயக்குநர் (நலப்பணிகள்) ரமேஷ்பாபு, துணை இயக்குநர் (சுகாதாரம்) மீரா உள்ளிட்ட கலந்து கொண்டனர்.
கிராம உதவியாளர்கள் தண்டோரா மூலம் தடுப்பூசி செலுத்த உள்ளதை விளம்பரம் செய்ய வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago