தேர்தல் வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றுவாரா? : கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற தென் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

“திமுக ஆட்சியில் மதுரை கப்பலூர் டோல்கேட் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்’’ என்று மதுரை ஒத்தக்கடை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கூறிய முதல்வர் ஸ்டாலின், அதை நிறைவேற்ற வேண்டும் என்று தென் மாவட்ட மக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை ஒத்தக்கடையில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சி நடந்தது. அப்போது திருமங்கலத்தைச் சேர்ந்த வாசு பேசுகையில், ‘‘19 ஆண்டு களாக ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிகிறேன். சட்டத்தை மீறி திருமங்கலம் நகராட்சி பகுதியான கப்பலூரில் டோல்கேட் அமைத்துள்ளனர். இதனால் விபத்து களில் காயமடைந்தவர்களை விரைவாக மதுரை அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்று உயிரை காப்பாற்ற முடியவில்லை. இந்த டோல்கேட்டை அகற்ற எத்தனையோ ஆட்சியர்களிடம் முறையிட்டுள்ளோம். நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்றார்.

அதற்கு பதிலளித்த ஸ்டா லின், ‘‘தமிழகம் முழுவதும் முறையில்லாமல் மத்திய, மாநில அரசுகள் டோல்கேட்டுகள் அமைத்துள்ளதால் வாகன ஓட்டு நர்கள், மக்கள் சாலைகளை கடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டுள்ளனர். டோல்கேட் உள்ள சாலைகளும் தரமாக இல்லை. ஆனால், மக்களிடம் வசூல் மட்டும் செய்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும் டோல்கேட் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். கப்பலூர் சுங்கச் சாவடி அகற்றப்படும்’’ என்றார்.

அதுபோல், சென்னையில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது சென்னை ஓஎம்ஆரில் உள்ள 4 டோல்கேட்டுகளில் கட்டண வசூல் நிறுத்தப்படும் என்று ஸ்டாலின் வாக்குறுதியளித்து இருந்தார்.

அவர் கூறியபடி, சட்டப் பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ‘‘சென்னை மெட்ரோ ரயில் பணிகள் தொடங் கப்படுவதையொட்டி, ராஜீவ் காந்தி சாலையில் (பழைய மகாபலிபுரம் ரோடு) உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை மற்றும் மேடவாக்கம் சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவது நிறுத்தப்படுகிறது,’’ என்று அறிவித்தார். மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 5 சுங்கச் சாவடிகளை அகற்ற மத்திய அரசை வலியுறுத்த உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஆனால், கப்பலூர் டோல்கேட் கட்டண வசூலை நிறுத்த வேண் டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் பல ஆண்டுகளாக போராடி வரும் நிலையில், அமைச்சர் எ.வ.வேலு, கப்பலூர் டோல்கேட் கட்டண வசூலை நிறுத்தவும், அதனை அகற்றவும் எந்த அறிவிப்பும் வெளியிடாததால் தென்மாவட்ட மக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.

எனவே தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தபடி கப்பலூர் டோல்கேட்டை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதனை உள்ளூர் அமைச் சர்களும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும் என வும் தென் மாவட்ட மக்கள் எதிர் பார்க்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்