புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கல்லுக்குண்டுக் கரையைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் விஜய் என்ற செல்வகணபதி (24). இவருக்கும், மேலசுண்ணாம்புக்காரத் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சசிதரன் என்ற செந்தில்ராஜா(29) உள்ளிட்ட சிலருக்கும் இடையே கடந்த மாதம் 28-ம் தேதி இரவு மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
அதில், செந்தில்ராஜா தரப்பினர் தாக்கியதில் செல்வகணபதி உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குடி போலீஸார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், இக்கொலையில் தொடர்புடைய செந்தில்ராஜா, கேவிஎஸ் தெருவைச் சேர்ந்த வீரக்குமார் மகன் தபசு முருகன்(27), நடராஜ் மகன் சூர்யராஜ்(29), அம்பேத்கர் நகரைச் சேர்ந்த முருகன் மகன் விமல்ராஜ்(22), நாடிமுத்து மகன் வீரமணி(21), போஸ் மகன் வெள்ளைசாமி(21), முருகன் மகன் கவுதம்(21), காந்தி சிலை பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் கண்ணன்(30) ஆகிய 8 பேரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago