மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி முகாம் :

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாற்றுத்திறனாளி களுக்கான கரோனா தடுப்பூசி முகாமை ஆட்சியர் வே.விஷ்ணு தொடங்கி வைத்தார்.

ஆட்சியர் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட் டத்தில் அலுவலகத்தில் பதிவு செய்த மாற்றுத்திறனாளிகளில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 12,156 பேர் உள்ளனர். அவர்களில் 2,722 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண் டனர். மீதமுள்ள 9,434 மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் மூலம் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாளையங்கோட்டையை அடுத்து, இன்று (3-ம் தேதி) மானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், வரும் 7-ம் தேதி நாங்குநேரி , 8-ம் தேதி களக்காடு, 9-ம் தேதி வள்ளியூர், 14-ம் தேதி ராதாபுரம், 15-ம் தேதி சேரன்மகாதேவி, 16-ம் தேதி பாப்பாக்குடி மற்றும் 17-ம் தேதி அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது என்று, ஆட்சியர் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், முடநீக்கியல் வல்லுநர் பிரபாகரன், வட்டார மருத்துவ அலுவலர் ஜஸ்டின், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து கிருஷ்ணன் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்