வேலூரில் பொது விநியோக திட்ட பொருட்கள் விற்பனை குறைபாடு புகாரில் ரேஷன் கடை விற்பனையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள முத்து மண்டபம் பகுதியில் கற்பகம் கூட்டுறவு சங்கத்தின் கீழ் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் விற்பனையாளராக கலையரசி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர், அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களுக்கு முறையாக விநியோகிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், பொது விநியோக பொருட்களை அருகில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்துள்ளதாகக் கூறி ரேஷன் கடையை பொதுமக்கள் கடந்த மாதம் 26-ம் தேதி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) காமராஜ், பறக்கும் படை வட்டாட்சியர் கோட்டீஸ்வரன், உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை செய்தனர். மேலும், பொதுமக்கள் புகார் தெரிவித்த வீட்டில் சோதனை நடத்தியதில் 15 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 750 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். அந்த வீட்டின் உரிமை யாளர் அரி (61) என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில், புகாருக்கு உள்ளான ரேஷன் கடையில் பொருட்கள் இருப்பு மற்றும் பொருட்கள் விநியோகம் செய்யப் பட்ட விவரங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில், குறை பாடுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பான அறிக்கையை கூட்டுறவு சங்கங் களின் இணை பதிவாளர் திருகுண ஐயப்பதுரைக்கு மாவட்ட வழங் கல் அலுவலர் (பொறுப்பு) காமராஜ் இரு தினங்களுக்கு முன்பு அனுப்பி வைத்தார்.
அதனடிப்படையில் புகாருக்கு உள்ளான விற்பனையாளர் கலையரசியை சஸ்பெண்ட் செய்து இணை பதிவாளர் திருகுண ஐயப்பதுரை உத்தர விட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago