ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு - தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‘உள்ளாட்சித் தேர்தல்-2021’ நடத்துவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவ லர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்து பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசும்போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் முன்னிட்டு 6 ஊராட்சி ஒன்றியங்களில் 1,779 கிராம ஊராட்சி வார்டுகள், 208 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள், 125 ஊராட்சி ஒன்றிய வார்டுகள் மற்றும் 13 மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. 13 மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கு 2 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் 13 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும், ஊராட்சி ஒன்றிய வார்டுகளுக்கு 6 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் 24 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 208 கிராம ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலுக்கு 6 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 36 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 208 ஊராட்சி வார்டுகளுக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இங்கு தேர்தல் தொடர்பான பயிற்சிகள் அளிக் கப்பட உள்ளன. இதில், வாக்குச் சாவடி மையங்களுக்கு தேர்தல் அலுவலர்களை நியமித்தல் உள்ளிட்ட பணிகள் குறித்த பயிற்சிகள் தொடர்ச்சியாக அளிக் கப்படும்.

இப்பயிற்சி வகுப்பில் பங் கேற்கும் தேர்தல் நடத்தும் அலு வலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அதிகாரி களிடம் கேட்டு தெரிந்துக்கொண்டு ஊரக உள்ளாட்சித் தேர்தல் அமைதியான முறையிலும், நியாயமான முறையில் நடைபெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, மகளிர் திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, வேளாண்மை இணை இயக்குநர் ராஜசேகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஹரிஹரன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்