ஆள்மாறாட்டம் செய்து பத் திரப்பதிவு மேற்கொண்டு நில மோசடி செய்த 2 பேர் மீது ராமநாதபுரம் மாவட்ட நில மோசடி தடுப்புப் பிரிவு போலீ ஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
கமுதி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கே.செல் லையா (63). இவரது தாத்தா கருப்பனுக்கு 5 மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கருப்பன் இறந்துவிட்டார். அவருக்குச் சொந்தமாக அப்பகுதியில் உள்ள 1.51 ஏக்கர் நிலத்தில் அவரது வாரிசுகள் தற்போது விவ சாயம் செய்து வருகின்றனர். இந்நிலத்துக்கு பட்டா மட்டுமே உள்ளது. பத்திரம் இல்லை.
இதனைப் பயன்படுத்திக் கொண்ட கமுதி வெள்ளையாபு ரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், விருது நகர் பகுதியைச் சேர்ந்த கருப் பன் என்பவரது பெயரில் ஆள் மாறாட்டம் செய்து கடந்த ஜூனில் கமுதி சார்பதிவாளர் அலுவலகத்தில் மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளார். பின்னர் பட்டாவிலும் மாற்றம் செய்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த செல் லையா அளித்த புகாரின் பேரில் ராஜேந்திரன், கருப்பன் ஆகியோர் மீது ராமநாதபுரம் மாவட்ட நில மோசடி தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago