மாவுப் பூச்சியால் பாதிக்கப்பட்ட மரவள்ளிக் கிழங்கு சாகுபடி பரப்பு தொடர்பாக கணக்கெடுப்பு நடத்த நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயசிங், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நாமக்கல் வசந்தபுரத்தில் உள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் மண்பரிசோதனை நிலையத்தை நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார்.
அப்போது, மண் மாதிரி எடுக்கும் முறைகள், வட்டார வாரியாக மண் மாதிரி இலக்கு, வரவு மற்றும் பகுப்பாய்வு குறித்தும், மண் மற்றும் நீர் மாதிரிகள் ஆய்வகத்தில் பெறப்படும் விதம் தொடர்பாக ஆட்சியர் கேட்டறிந்தார்.
மேலும், “உதவி வேளாண்மை அலுவலர்கள் தங்களது பயணத் திட்டத்தின்போது கிராம நிர்வாக அலுவலருடன் ஒருங்கிணைந்து பயிர் சாகுபடி பரப்பை ஆய்வு செய்ய வேண்டும்” என ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மேலும், மாவுப் பூச்சியால் பாதிக்கப்பட்ட மரவள்ளி சாகுபடி பயிர் பரப்பு குறித்து கணக்கீடு செய்து அதன் விவரங்களை சமர்பிக்க வேண்டும் என தோட்டக்கலை துறை உதவி இயக்குனருக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது, வேளாண் இணை இயக்குநர் பொ.அசோகன், வேளாண் உதவி இயக்குநர் தி. அன்புச்செல்வி, தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் ப.மணிகண்டன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago