ரங்கம் ரங்கநாதர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி உற்சவம் நேற்று நடைபெற்றது.
இதையொட்டி, நேற்று காலை கிருஷ்ணர் சன்னதியிலிருந்து புறப்பட்டு, எண்ணெய் விளையாட்டு கண்டருளி மீண்டும் சன்னதிக்கு திரும்பினார். பின்னர், மாலை 3 மணிக்கு நம்பெருமாள், உபயநாச்சியார்கள், கிருஷ்ணர் ஆகியோருடன் திருச்சிவிகையில் புறப்பட்டு கருட மண்டபத்தை வந்தடைந்தார். அங்கிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு 9.15 மணிக்கு கருட மண்டப வளாகத்திலேயே உறியடி உற்சவம் கண்டருளினார்.
இதற்கென கருட மண்டபத்தில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அலங்கரிக்கப்பட்ட 3 பானைகளில் பால், தயிர், வெண்ணை நிரப்பபட்டு, அதன் எதிரே நம்பெருமாள், கிருஷ்ணர் ஆகியோர் வந்தவுடன், நீண்ட குச்சியால் பானைகள் உடைக்கப்பட்டு உறியடி உற்சவம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, அங்கிருந்து கிருஷ்ணர் மற்றும் நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானத்தை சென்றடைந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago