திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப் பட்டதை அடுத்து மாணவ, மாணவி கள் உற்சாகமாக வகுப்புகளுக்கு வந்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் என்று 319 பள்ளிகள், தென்காசி மாவட்டத்தில் 248 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.
இப்பள்ளிகளுக்கு வந்த 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளின் உடல் வெப்பநிலை சோதிக்கப்பட்டது. முகக்கவசம் அணியாமல் வந்த மாணவ, மாணவியருக்கு பள்ளியில் முகக்கவசம் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு தொடர்பான நடவடிக்கைகளை கண்காணிக்க அமைக்கப்பட்டிருந்த 13 குழுக்களும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டன.
இதுபோல், கல்லூரிகளும் நேற்று திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கின. கல்லூரிகளிலும் கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. 2 மற்றும் 3-ம் ஆண்டு மாணவ, மாணவியருக் கான வகுப்புகள் நடத்தப்பட்டன. பள்ளி மற்றும் கல்லூரிகளில் விடுதிகளும் திறக்கப்பட்டன. பேருந்துகளில் மாணவ, மாணவியர் கூட்டம் அதிகமிருந்தது.
தூத்துக்குடி
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 483 பள்ளிகள் நேற்று திறந்து செயல்பட்டன. பெரும்பாலான மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளி, கோட்டாறு கவிமணி அரசு பள்ளி ஆகியவற்றை ஆட்சியர் மா.அரவிந்த் ஆய்வு செய்தார்.பின்னர் அவர் கூறும்போது, “கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் வகுப்புகளுக்கு வரவேண்டாம் என பள்ளி நிர்வாகத்தால் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்களுக்கு இணைய வழியில் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆசிரியர்கள் தடுப்பூசி இரு தவணை செலுத்தியதற்கான சான்றிதழை தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பித்த பின்னரே வகுப்புகள் நடத்த அனுமதிக்கப் பட்டனர்.
கல்லூரி மாணவ, மாணவியர் கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்கள் வகுப்பறைக்குள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago