எல்ஐசி திருநெல்வேலி கோட்ட அலுவலகத்தில் 65-வது காப்பீட்டு வார விழா நேற்று தொடங்கியது.
முதுநிலை கோட்ட மேலாளர் என்.ராமகிருஷ்ணன் எல்ஐசி நிறுவன கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது:
நாட்டின் வளர்ச்சி திட்டங்களில் ரூ.36.76 லட்சம் கோடி நிதி பங்களிப்பை எல்ஐசி வழங்கியுள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ1.47 லட்சம் கோடியை உரிமத்தொகையாக 2.29 கோடி வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. எல்ஐசி 14 நாடுகளுக்கு தனது காப்பீட்டு சேவையை விரிவுபடுத்தியுள்ளது. பிராண்ட் பைனான்ஸ் உலக தர நிறுவனத்தின் தர மதிப்பீட்டின்படி முன்னணி 100 நிறுவனங்களில் ஒன்றாகவும், உறுதி தன்மையில் 3-ம் இடத்தையும், மதிப்புமிக்க பிராண்ட்களில் 10-வது இடத்தையும் எல்ஐசி பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.
வாடிக்கையாளர் சேவை மையத்தை, மாநகர காவல் துணை ஆணையர் டி.பி. சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார். திறன் போட்டிகளில் வெற்றிபெற்ற ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாநகர காவல்துறைக்கு எல்.ஐ.சி. சார்பில் 10 சாலை தடுப்பு அரண்கள் வழங்கப்பட்டன. வணிக மேலாளர் ஆர். ரமேஷ் நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago