திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த காமக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வ ராஜ் (41). இவர், கடந்த 2003-ம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்து 2008-ம் ஆண்டில் உதவி ஆய்வாளராக பணி உயர்வு பெற்றார்.
வேலூர் மாவட்டம் வேலூர் சரகத்துக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் உதவி ஆய் வாளராக பணியாற்றி வந்த செல்வ ராஜ், வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடந்த மே மாதம் 8-ம் தேதி உயிரிழந்தார்.
இவரது மனைவி கோமதி என்பவர் வேலூரில் பெண் காவலராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். உயிரிழந்த உதவி ஆய்வாளர் செல்வராஜிக்கு உதவ நினைத்த 2003-ம் ஆண்டு சக காவலர்கள், தமிழகம் முழுவதும் தங்களுடன் காவல் பணியில் சேர்ந்த காவலர்களை ‘டெலிகிராம்’ செயலி மூலம் ஒன்று சேர்த்து 5,598 பேர் தலா ரூ.500 வீதம் நிதி திரட்டினர்.
எல்ஐசி காப்பீடு
அதன் மூலம் கிடைக்கப்பெற்ற 27 லட்சத்து 99 ஆயிரம் ரூபாயை, உயிரிழந்த செல்வராஜியின் 3 மகள்கள் பயன்பெறும் வகையில், தலா 9 லட்சத்து 32 ஆயிரம் என எல்ஐசி நிறுவனத்தில் (பாலிசி) காப்பீடு எடுத்து அதற்கான ஆவணங்களை உயிரிழந்த உதவி காவல் ஆய்வாளர் செல்வராஜியின் மனைவி கோமதியிடம் நேற்று வழங்கினர்.மேலும் பாலிசி மூலம் கிடைக்கப்பெற்ற முகவர் கமிஷன் தொகை 54 ஆயிரத்து 55 ரூபாய் ரொக்கப்பணத்தை கோமதியிடம் காவலர்கள் வழங்கினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago