கீழக்கரை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு விழா :

By செய்திப்பிரிவு

கீழக்கரை அருகே கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு விழா நடை பெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக் கரை அருகே உள்ள காஞ் சிரங்குடியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. ராம நாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 14 காளைகளும், மாடுபிடி வீரர் களும் வடமாடு மஞ்சு விரட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

முதலாவதாக காஞ்சிரங்குடி கிராமத்தின் சார்பில் வடமாடு காளை விடப்பட்டது. இதை மாடுபிடி வீரர்கள் அடக்க முடியாததால் மாடு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வடமாடு மஞ்சுவிரட்டைக் காண திருப்புல்லாணி, கீழக்கரை, மாயா குளம், ஏர்வாடி தர்கா உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு குத்துவிளக்கு, எவர்சில்வர் பானை உள்ளிட்டவை பரிசுகளாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கே.ஆதித்தன் தலை மையிலான குழுவினர் செய்திருந் தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்