வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் - உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு : 13.84 லட்சம் வாக்காளர்கள்; 2,741 வாக்குச்சாவடிகள் தயார்

வேலூர், ராணிப்பேட்டை மாவட் டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலை முன்னிட்டு 13 லட்சத்து 84 ஆயிரத்து 221 பேரின் புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கிராம ஊராட்சி அலுவலகங்களில் வாக் காளர் பட்டியலை பொதுமக்கள் பார்வையிடலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக தொடங் கப்பட்ட 9 மாவட்டங்களில் விரை வில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடை பெறவுள்ளது. இதற்கான முன் னேற்பாடு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 9 மாவட்டங்களிலும் புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் பொது மக்கள் பார்வைக்காக நேற்று வெளியிடப்பட்டது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வெளியிட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி பெற்றுக் கொண்டார். இதில், 3 லட்சத்து 48 ஆயிரத்து 898 ஆண்களும், 3 லட்சத்து 68 ஆயிரத்து 6 பெண்களும், மூன்றாம் பாலினத் தவர்கள் 80 பேர் என மொத்தம் 7 லட்சத்து 16 ஆயிரத்து 984 பேர் இடம் பெற்றுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி பெற்றுக்கொண்டார்.

இதில், 3 லட்சத்து 26 ஆயிரத்து 701 ஆண்களும், 3 லட்சத்து 40 ஆயிரத்து 498 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 38 என மொத்தம் 6 லட்சத்து 67 ஆயிரத்து 237 பேர் இடம் பெற் றுள்ளனர்.

வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தலா 7 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில், வேலூர் மாவட்டத்தில் 138, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 127 என மொத்தம் 265 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், வேலூர் மாவட்டத்தில் 247, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 288 என மொத்தம் 535 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், வேலூர் மாவட்டத்தில் 2,079 மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2,220 என மொத்தம் 4,299 கிராம ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு வேலூர் மாவட்டத்தில் 14, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13 என மொத்தம் 5,126 பதவிகளுக்கு வாக்குச்சீட்டு முறையில் நேரடி தேர்தல் நடை பெறவுள்ளது.

இதற்காக, வேலூர் மாவட் டத்தில் 1,331, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,410 என மொத்தம் 2,741 வாக்குச் சாவடிகள் அமைக் கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE