விழுப்புரம் - சென்னை சாலையில் புதிதாக ரூ.1.59 கோடி செலவில் தீயணைப்பு நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. இதனை சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலி மூலம் திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து தீயணைப்பு நிலையத்தில் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி வைத்தார். தொடர்ந்து, விக்கிரவாண்டி எம்எல்ஏபுகழேந்தி குத்து விளக்கேற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டதீயைணப்பு அலுவலர் லோகநாதன், நிலைய அலுவலர் முகமது முராத், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி உதவி பொறியாளர் ராஜாமணி, திமுக மாவட்ட அவைத்தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், துணை செயலாளர் புஷ்பராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago