திருச்சி தேசிய கல்லூரி மற்றும் இந்தியன் சயின்ஸ் மானி்ட்டர் அமைப்பு சார்பில் ‘கிருஷ்ணனைத் தேடி’ நூல் வெளியீட்டு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
கிருஷ்ண ஜெயந்தி தினமான நேற்று இந்தியன் சயின்ஸ் மானிட்டர் அமைப்பின் தலைவர் டி.கே.வீ.ராஜன் எழுதிய கிருஷ்ணனைத் தேடி நூலை கல்லூரி முதல்வர் ஆர்.சுந்தரராமன் வெளியிட, கல்லூரி துணை முதல்வர்கள் பிரசன்ன பாலாஜி, நந்தகோபால் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
நூலாசிரியர் டி.கே.வீ.ராஜன் ஏற்புரையில், நம் நாட்டில் மட்டுமே கடவுளின் பெயரால் அதிக அளவில் மனிதர்களை அழைக்கிறோம். இறை பக்தி நம் ரத்தத்தில் கலந்துள்ளது. இந்த நூல் நம் நாட்டின் கலாச்சாரம் மற்றும் மதிப்புகள் குறித்து அதிகம் பேசுகிறது. கிருஷ்ணன் ஒரு கதாபாத்திரம் அல்ல.அனைத்து அகழ்வாராய்ச்சியும் அரசியலாக்கப்பட்டு, ஆராய்ச்சி நடைபெறுகிறது. நம் குழந்தைகள் அனைவரும் மகாபாரதம் படிக்க வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago