கரோனா பரவலைத் தடுப்பதற்காக செப்.6-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் போலீஸார் ஆங்காங்கே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி அண்ணாசிலை ரவுண்டானா, மத்திய பேருந்து நிலையம், மாம்பழச்சாலை, மேலப்புதூர், காந்தி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் நடத்திய சிறப்பு வாகன தணிக்கையின்போது, முகக்கவசம் அணியாமல் வந்த 1200-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 30 பேர் மற்றும் ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாதவர்கள் உள்ளிட்ட 2,000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.6 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கரோனா 3-ம் அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாநகர காவல் ஆணையர் அருண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago