கடலூர் மாவட்டத்தில் - வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை :

By செய்திப்பிரிவு

கடலூரில் வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கையினை ஊக்குவிக்கும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடுவணிகர் நல வாரியத்தில் கட்டண மின்றி ஆயுட்கால உறுப்பினர்கள் சேர்க்கையினை ஊக்குவிக்கும் பொருட்டு மாவட்டஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தலைமை யில் உள்ளாட்சி நிர்வாக அலுவலர்கள் மற்றும் வணிகர் சங்கபிரதிநிதிகளுடன் கூட்டம் நடைபெற் றது. வணிகர் நல வாரியத்தினால் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பயன்கள் குறித்து மாவட்ட ஆட் சியர் தெரிவித்தது:

வணிகர்களின் கடை தீ விபத்து மற்றும் பேரிடர் இழப்புக்கு ரூ.5,000வழங்கப்படுகிறது. மாற்று அறுவைசிகிச்சை, சிறுநீரக மாற்று, புற்று நோய் அறுவை சிகிச்சைக்கு ரூ.50,000, பெண் உறுப்பினர்களின் கர்ப்பப்பை நீக்க சிகிச்சைக்கு ரூ.20,000 வழங்கப்படுகிறது. உறுப்பினர் இறப்புக்கு குடும்ப நிதியாக ரூ.1 லட்சம், கீமோ தெரபி,ஆஞ்சியோ சிகிச்சைக்கு ரூ.15,000 போன்ற உதவிகள் வணிகர் நல வாரியத் தால் வழங்கப்படுகிறது. " httpt:/www/tn.gov.in/tntwb" என்ற இணையதளத்தின் மூலம் உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்றார். கடலூர் (வணிகவரி) துணை ஆணையர் ஆறுமுகம், உதவி ஆணையர்கள் கணேஷ், அரவிந்த்,ராஜ்குமார் வணிகர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்