திமுக சார்பில் மினி மாரத்தான் ஓட்டம் :

By செய்திப்பிரிவு

முன்னாள் முதல்வர் கருணாநிதி யின் நினைவு நாளையொட்டி, மண்ணச்சநல்லூரில் நேற்று திமுக சார்பில் மினி மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது.

மாநில நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து மாரத்தான் ஓட்டத் தைத் தொடங்கி வைத்தார். மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ சீ.கதிரவன் முன்னிலை வகித்தார்.

இதில், 1,100-க்கும் மேற்பட் டோர் கலந்துகொண்டு மண்ணச் சநல்லூர் எம்எல்ஏ அலுவலகத் திலிருந்து எதுமலை சாலை, துறையூர் சாலை, புதிய சுற்றுச் சாலை வழியாக மீண்டும் மண்ணச் சநல்லூர் எம்எல்ஏ அலுவலகத் துக்கு வந்தடைந்தனர்.

இந்நிகழ்ச்சியில், திமுக வடக்கு மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான காடுவெட்டி ந.தியாகராஜன், எம்எல்ஏ ஸ்டா லின்குமார், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன், மாவட்ட அவைத்தலைவர் அம்பிகாபதி, ஒன்றியச் செயலாளர்கள் இளங் கோவன், செந்தில்குமார், ராமச் சந்திரன், காட்டுக்குளம் கணேசன், சேகரன், ஒன்றியக்குழுத் தலைவர் தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக புதுக்கோட்டை மாவட்டம் கந்தர் வக்கோட்டையில் மினி மாரத் தான் ஓட்டம் நேற்று நடை பெற்றது. வட்டாட்சியர் அலுவ லகம் அருகே தொடங்கிய மாரத்தான் ஓட்டத்தை, திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் தொடங்கி வைத்தார். இந்த மினி மாரத்தான் பேருந்து நிலையம், காந்தி சிலை வழியாக 4 கி.மீ தொலைவுக்கு நடைபெற்றது. இதில், கட்சியினர், மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதேபோல, பெரம்பலூர் மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில் 5 கி.மீ தொலைவுக்கு மினி மாரத்தான் ஓட்டம் பெரம்பலூரில் நேற்று நடைபெற்றது.

கட்சியின் மாவட்டச் செயலா ளரும், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவருமான குன்னம் சி.ராஜேந்திரன் பாலக்கரை அருகே கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் எம்எல்ஏ பிரபாகரன், மாநில திமுக மருத் துவ அணி துணைச் செயலாளர் செ.வல்லபன், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத் துவர்கள் சங்கத் தலைவர் பெ.சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பாலக்கரையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக பாலக் கரை அருகிலுள்ள மாவட்ட திமுக அலுவலகம் வரை மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்