திருநெல்வேலியில் ரோட்டரி சங்கம், அரவிந்த் கண் வங்கி மற்றும் கண் மருத்துவமனை சார்பில் 36-வது தேசிய கண்தான இருவார விழாவை முன்னிட்டு கண்தான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களிடம் விநியோகம் செய்யப்பட்டது.
அரவிந்த் கண் மருத்துவமனை ஆலோசகர் டாக்டர் ராமகிருஷ்ணன், தலைமை மருத்துவர் மீனாட்சி ஆகியோர் தலைமை வகித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கினர்.
கரு விழி தலைமை மருத்துவர் அனிதா, சிவப்பிரகாசர் நற்பணி மன்றச் செயலாளர் கோ.கணபதி சுப்பிரமணியன், கண் வங்கி பொறுப்பாளர் சாரதா ஆகியோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago