தென்காசியில் சாலையில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு : நகராட்சி நிர்வாகம் மீது பொதுமக்கள் புகார்

தென்காசி நகராட்சி 33 வார்டுகளைக் கொண்டது. நகரின் 10, 11-வது வார்டு பகுதிகளான மதினா நகர், கீழ பாறையடி தெரு பகுதிகளில் பல ஆண்டுகளாக சாலை வசதி, கழிவுநீர் ஓடை வசதி, குடிநீர் வசதி எதுவும் இல்லை என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, “மாவட்டத் தலை நகராக உள்ள தென்காசி நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகிறது. குற்றாலத்துக்கு மிகவும் அருகில் இருந்தும் குடிநீர் வசதியின்றி அவதிப்படுகிறோம். குடிநீருக்காக ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு மேல் அலைந்து தண்ணீர் பிடித்து வருகிறோம். சாலை வசதி, கழிவுநீர் ஓடை, குடிநீர் வசதி இல்லாமல் பல ஆண்டுகளாக அவதிப்படுகிறோம்.

வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கிக் கிடக்கிறது. இதனால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.

பொதுமக்கள் நலன் கருதி சாலை வசதி, சாலையின் இரு புறமும் கழிவுநீர் ஓடை, குடிநீர் வசதி செய்து தர வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்