தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் (ஏஐடியுசி) திருநெல்வேலி மாவட்ட செயற்குழு கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார் மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். ஏஐடியுசி மாநிலச் செயலாளர் காசி விஸ்வநாதன், மாவட்டச் செயலாளர் சடையப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், “டாஸ்மாக்கில் கேரள அரசின் மதுக் கடைகளின் நிர்வாக செயல்முறைகளை அமல்படுத்தவும், 18 ஆண்டுகளாக தினக்கூலிகளாக பணிபுரியும் டாஸ்மாக் பணியாளர்களை நிரந்தரம் செய்யக் கோரியும் செப்டம்பர் 1-ம் தேதி பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று தமிழக முதல்வருக்கு அஞ்சல் மூலம் அனுப்பும் கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது. டாஸ்மாக் பணியாளர்களுக்கு இஎஸ்ஐ திட்டத்தை அமல்படுத்த வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் நீண்டகால பணி நீக்கத்தில் உள்ள பணியாளர்களுக்கு பணி வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சாஸ்தா நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago