ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை வசம் உள்ள 114 ஏக்கரைச் சுற்றி ரூ.2 கோடி மதிப்பில் வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த வேலியில் ஆங்காங்கே கேட்கள் அமைப்பதற்காக, இரும்பு கேட்கள் கொண்டுவந்து வைக்கப்பட்டிருந்தன. கடந்த 14, 15-ம் தேதிகளில் 700 கிலோ எடை கொண்ட 12 இரும்பு கேட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து தொல்லியல் துறை சார்பில் செய்துங்கநல்லூர் போலீஸில் புகார் அளிக்கப் பட்டது. தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இவ்விவகாரத்தில் திசையன் விளை முதுமொத் தன் மொழி ராஜா மகன் உதய குமார் (32), இடையன்குடி தங்கதுரை மகன் சுபாஷ் (23) கைது செய்யப்பட்டனர். விசாரணையில், இரும்பு கேட்களை சிறு, சிறு கம்பிகளாக வெட்டி இட்ட மொழியைச் சேர்ந்த சேர்மத்துரை மகன் அருள் ராஜ்(34) என்பவரிடம் விற் பனை செய்துள்ளனர். அவர் அவற்றை உருக்கி இரும்பு கட்டிகளாக்கி வைத்துள்ளார். இரும்பு கட்டிகளை கைப் பற்றிய போலீஸார், அருள்ராஜை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 மினி லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago