ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது விநியோக திட்டம் தொடர்பான புகாரை மாவட்ட வருவாய் அலு வலரிடம் தெரிவித்து, அதற்கான தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித் துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பொது விநியோக திட்டம் தொடர்பான புகார்களை விசாரித்து தீர்வு காண குறைதீர்வு அலுவலராக மாவட்ட வருவாய் அலுவலரை (டிஆர்ஓ) தமிழக அரசு நியமித்துள்ளது. எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது விநியோக திட்டம் மூலம் பொதுமக்கள் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் நேரடியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ, மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.
பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் பதிவு செய்யும்போது அந்த புகார் தொடர்பான விவரம், புகார்தாரரின் தொடர்பு எண், முகவரி குறித்த விவரங்கள் அதில் பதிவு செய்யப்படும். புகார்தாரர்கள் எழுத்து மூலம் புகார் அளிக்க முடியாதபட்சத்தில் அதற்கான உதவிகளை மாவட்ட குறை தீர்வு அலுவலர் வழங்குவார். ஒவ்வொரு புகாருக்கும் தனிப்பட்ட புகார் எண் ஒதுக்கீடு செய்யப்படும்.
30 நாட்களுக்குள் தீர்வு
பொதுமக்களிடம் இருந்து பெறப் படும் புகார் குறித்த உண்மை தன்மை மாநில அரசின் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் சரிபார்க்கப்பட்ட பிறகு, அந்த புகாருக்கான தீர்வு 30 நாட் களுக்குள் எடுக்கப்படும். அதேபோல, புகார் மனு மீது தீர்வு காணப்பட்ட விவரம், எழுத்து மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ புகார்தாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.ஆகவே, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பொது விநியோகம் திட்டத்தில் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அல்லது பொது விநியோகம் திட்டம் தொடர்பான கோரிக்கைகளை மாவட்ட வருவாய் குறை தீர்வு அலுவலருக்கு புகாராக தெரிவித்து அதன் மீது தீர்வு கண்டு பயன்பெற வேண்டும்.
இதற்கான மின்னஞ்சல் dro.rpt@tn.gov.in என்ற முகவரியிலும், 94895-43000 என்ற கைப்பேசி எண்ணிலும், 04172-299973 என்ற தொலைபேசி எண் வாயிலாக தங்களது புகார் மனுக்களை பதிவு செய்யலாம்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago