குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் விழுப்புரத்தில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் நகராட்சிகுட்பட்ட எல்லீஸ்சத்திரம் தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து பிரதான குழாய் மூலம் நரசிங்கபுரம், அலமேலுபுரம், கீழ்பெரும்பாக்கம், காமராஜர் பள்ளி மைதானம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றப்படுகிறது. இங்கிருந்து 2,3,7,8,9,10,17,18,20,21,22,23,24,25,34,35,37 ஆகிய வார்டுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதற்கான குடிநீர் ஏற்றும் பிரதான குழாய் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை புறவழி சாலையின் கீழ் பதிக்கப்பட்டுள்ளது இதன் மையப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இதை சீர்செய்யும் பணியை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. பழுது நீக்கம் பணியை ஆட்சியர் மோகன் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.

நாளை முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படாமல் சீர் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது, சீரமைப்பு பணிக்கு நடுவில், குடிநீர் விநியோகம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக மேற்குறிப்பிட்ட வார்டுகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நகராட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குடிநீர் விநியோக லாரி தொடர்புக்கு 73958 55587, 97519 70929, 90804 65425, 87787 21684 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் மோகன் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

குடிநீர் குழாய் உடைப்பை சீர்செய்யும் பணியை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. குடிநீர் விநியோக லாரி தொடர்புக்கு 73958 55587, 97519 70929, 90804 65425, 87787 21684 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்