செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9 வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த அடிப்படையில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுவதை ஆட்சியர் மோகன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர். செய்தியாளர்களிடம் கூறியது:
மாவட்டத்தில் 367 பள்ளிகளையும் திறப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதுவரை மாவட்டத்தில் 8,941 தலைமையாசிரியகள், ஆசிரியர்களும், 7,869 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனர். பள்ளிக் கல்வி துறையில் 88 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.மாவட்ட அளவில் உள்ள அரசு ஊழியர்கள், காவல்துறையினர் என 91 சதவீதத்தினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார்.மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கிருஷ்ணப்ரியா, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago