செப்.1-ல் மாணவர்களை வரவேற்க பள்ளிகள் தயார் : வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தீவிரம்

By செய்திப்பிரிவு

செப்டம்பர் 1-ம் தேதி மாணவர்களை வரவேற்க பள்ளிகள் முழு வீச்சில் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

கரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப் பட்டுள்ளன.

மாணவர்களுக்கு பாடங் கள் ஆன்-லைன் மூலமே நடத்தப்படுகின்றன. தற்போது, கரோனா தொற்று குறைந்து வரு வதையொட்டி, கட்டுப்பாடு களை அரசு மெல்ல மெல்ல தளர்த்தி வருகிறது.

அதோடு, செப்டம்பர் 1 முதல் தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக் கப்பட்டு வகுப்புகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.அதோடு, கரோனா கட்டுப்பாடு களை பின்பற்றி பள்ளிகளைத் திறக்கவும் தமிழக அரசு அறிவித் துள்ளது. அதையடுத்து, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக மேற் கொள்ளப் பட்டு வருகின்றன.

அதோடு, செப்.1-ல் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரும் போது அவர்களை சமூக இடை வெளியுடன் வகுப்பறையில் அமரவைக்கவும், கைகளை சுத்தம் செய்து, உடல் வெப்ப நிலையைப் பரிசோதனை செய்தபிறகு வகுப்பறைக்குள் நுழைய அனுமதிக்கவும் பள்ளி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்