ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள கூலிப்பட்டியைச் சேர்ந்தவர் கோவிந் தராஜ்(70). இவர், தனது மனைவியுடன் கடந்த 24-ம் தேதி திருச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். பின்னர், இருவரும் அங்கிருந்து பேருந்தில் மதுரைக்கு வந்துள்ளனர். மதுரையிலிருந்து தனியார் பேருந்தில் அருப்புக்கோட்டைக்குச் சென்று கொண்டிருந்தனர். காரியாபட்டி அருகே வந்தபோது, சுமார் 35 வயது மதிக்கத்தக்க 2 பெண்கள் பேருந்தில் ஏறி கோவிந்தராஜ் மனைவி அருகில் அமர்ந்துள்ளனர்.
கோவிந்தராஜும் அவரது மனைவியும் அருப்புக்கோட்டை பேருந்து நிலையத்தில் இறங்கியபோது, அவர்களின் பையை இந்த 2 பெண்களும் எடுத்து தந்துள்ளனர்.
பின்னர், கோவிந்தராஜ் வீட்டுக்குச் சென்று பையைத் திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த 20 பவுன் நகைகளைக் காணவில்லை. அருப்புக்கோட்டை நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago