பணிகள் நடக்கும்போது நத்தம் பறக்கும்பாலம் இடிந்து விழுந்ததால், கட்டி முடிக்கப்பட்ட பாலத்தின் அனைத்து பகுதிகளின் தரத்தையும் ஆய்வு செய்ய வேண்டும் என விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
மதுரை-நத்தம் பறக்கும் பாலத்தை 2020-ம் ஆண்டு நவம்பரிலேயே முடித்திருக்க வேண் டும்.
ஆனால், கரோனா பரவலால் வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பி சென்றதால் பாலம் கட்டுமானப் பணி தற்போதுவரை நிறைவடையவில்லை. தற் போது வரை 80 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளன. கடந்த சில மாதங்களாக பணிகள் துரிதமாக நடந்தன. இன்னும் ஓராண்டில் போக்குவரத்துக்கு பாலம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நேற்று மாலை மதுரை நாராயண புரத்தில் பாலத்தின் இணைப்பு பாலம் சரிந்து விழுந்து இரு துண்டுகளாக உடை ந்தது.
பாலம் பயன்பாட்டுக்கு வரும் முன்பே இடிந்து விழுந்ததால் பொது மக் கள் பாலத்தின் தரம் குறித்து அதிர்ச்சி தெரிவித்தனர்.
இந்த விபத்தை நேரில் பார்த்த மகேந்திரன் கூறியதாவது: ஒரு சொந்த வேலை விஷயமாக விபத்து நடந்த பகுதி அருகே இருந்தேன். திடீரென்று வெடிகுண்டு வெடித் தது போன்ற பயங்கர சத்தத்துடன் பாலம் சரிந்து கீழே விழுந்து கொண்டிருந்தது. அடுத்தடுத்து அனைத்து பாலப்பகுதிகளும் இடிந்து விழுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. இதனால் பதற்றம் அடைந்த மக்கள் அங் கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
கட்டுமானப் பணி சரியான கண்காணிப்பு இன்றி நடந்தது. தற்போது நடந்த விபத்து ஒரு உதாரணம்தான். அதனால், இதுவரை கட்டிய பாலப் பகுதிகளை தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றார்.
இதுபற்றி தங்க கணேஷ் என்பவர் கூறி யதாவது: மேம்பாலம் பணி கடந்த 2 மாதமாக நடக்கவில்லை. குறைந்த பணியாளர்களைக் கொண்டு பணிகளைச் செய்தனர். எதிர்கால நன்மை கருதி சிரமத்தை சகித்துக் கொண்டோம்.
ஆனால், பாலம் இடிந்து விழுவதை பார்த்தால் எப்படி அதில் பயணம் செய்ய முடியும் என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. உரிய விசாரணை நடத்தி பாலம் தரமானதா? இல்லையா? அல்லது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறா? என்பதை அதிகாரிகள் தெளிவு படுத்த வேண்டும் என்றார்.
நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகா ரிகள் கூறியதாவது: பாலம் தரமாகக் கட் டப்படுகிறது. தூண்கள் மீது கான்கிரீட் கர்டரை தூக்கி நிறுத்தும்போது ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறால் அது சரிந்து விழுந்தது.
இந்த பாலம் சர்வதேச தொழில்நுட்பத்தில் கட்டப்படுவதால் அதன் தரத்தில் சந்தேகம் தேவையில்லை என்றனர். இதனிடையே பாலம் இடிந்து விழுந்ததால் தற்காலிகமாக பாலக் கட்டுமானப் பணியை நிறுத்த ஆட்சியர் அனீஷ்சேகர் உத்தரவிட்டார்.
அமைச்சர்கள் இன்று ஆலோசனை
இன்று காலை 7.30 மணிக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் புதுநத்தம் சாலை யில் நாராயணபுரம் அருகில் கட்டுமானப் பணியின்போது பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிடுகிறார்கள். அதன் பின்னர் விபத்து தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago