அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகோள் :

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL), இளைஞர்களுக்கு அயல்நாடு களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. இந்நிறுவனத்தின் வாயிலாக இதுவரை 10,350-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், மலேசியா, பஹ்ரைன், லிபியா, குவைத், சவுதிஅரேபியா, ஓமன், துபாய் மற்றும் கத்தார் போன்ற பல்வேறு நாடுகளில் மருத்துவர், பொறியாளர், செவிலியர், பாராமெடிக்கல்-டெக்னீஷியன்கள், திறன் சார்ந்த மற்றும் திறன் அல்லாத பணிக்காலியிடங்களில் வேலைவாய்ப்பு பெற்றிருக்கி ன்றனர்.

இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கங் கள், அதிகப்படியான திறன்படைத்த இளைஞர்களை உருவாக்குதல், இளைஞர்களை அயல்நாடுகளில் பணியமர்த்தும் பொருட்டு அவர் களுக்கு ஆங்கிலத்தில் பேசுதல், எழுதுதல், படித்தல், கவனித்தல் உள்ளிட்ட திறன்களை வளர்த்தல் போன்றவையாகும். ஒவ்வொரு ஆண்டும் 500 செவிலியர்களுக்கு தொழில்தொடர்பான ஆங்கிலத் தேர்வுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, தேர்வுசெய்யக்கூடிய செவிலியர் களுக்கு ஆண்டுக்கு ரூ. 18 லட்சம் வரை ஊதியம் பெற்றுத் தரப்படுகிறது.

அயல்நாட்டில் வேலைதேடும் இளைஞர்கள் www.omcmanpower.com என்ற இணையதளத்தில் தங்களின் சுயவிவரங்களை பதிவுசெய்வதன் மூலம் அயல்நாடுகளில் வேலை வாய்ப்பை பெற முடியும். இந்நிறுவனம் மூலம் அறிவிக்கப் படும் காலிப்பணியிடங்கள் மற்றும் அதற்கான கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்நிறுவனம் தொடர்பான முழுமையான விவரங்களை, திருநெல்வேலியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE