சேத்துப்பட்டில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக ஆட்டோக்களை நிறுத்தக்கூடாது என காவல் ஆய்வாளர் பிரபாவதி அறி வுறுத்தினார்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் போக்குவரத்தை ஒழுங்குப் படுத்துவது குறித்து ஆட்டோ ஒட்டுநர்கள் மற்றும் உரிமை யாளர்கள் பங்கேற்ற ஆலோ சனைக் கூட்டம் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் நடை பெற்றது.
காவல் ஆய்வாளர் பிரபாவதி தலைமை வகித்தார். அப்போது அவர் பேசும்போது, “சேத்துப்பட்டு நகரில் போக்கு வரத்து அதிகரித்துள்ளது. மக்கள் நடமாட்டமும் கூடியுள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதிப்பு அடிக்கடி ஏற்படுகிறது. இதற்கு, சாலைகளில் நிறுத்தப்படும் ஆட்டோக்களும் காரணமாக அமைந்து விடுகிறது. எனவே, போக்கு வரத்து மற்றும் பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் ஆட்டோக்களை நிறுத்த வேண்டும். ஆட்டோ உரிமம், ஓட்டுநர் உரிமம் மற்றும் இதர ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். ஓட்டுநர்கள், தவறாமல் சீருடை அணிந்திருக்க வேண்டும். கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான சான்றை, ஆய்வு செய்யும் அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும். மக்களுக்கு உதவும் நண்பர் களாக செயல்பட வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
இதில், உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago