திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணைக்கு விநாடிக்கு 231 கனஅடி தண்ணீர் வருகிறது.
வெப்பச்சலனம், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவண் ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மாலை முதல் அதிகாலை வரை மழை பெய்து வருகிறது. வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளில் பெய்து வந்த மழையானது, மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதியிலும் நேற்று முன்தினம் இரவு பெய்துள்ளது.
மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி சராசரியாக 29.17 மி.மீ., மழை பெய்துள்ளது. ஆரணியில் 26.5, செய்யாறில் 30, செங்கத்தில் 26.4, ஜமுனாமரத்தூரில் 30, வந்தவாசியில் 31, போளூரில் 36.2, திருவண்ணாமலையில் 16, தண்டராம்பட்டில் 28, கலசப்பாக்கத்தில் 46, சேத்துப்பட்டில் 27, கீழ்பென்னாத்தூரில் 41, வெம்பாக்கத்தில் 12 மி.மீ, மழை பெய் துள்ளன.
இதேபோல், சாத்தனூர் அணை பகுதியில் 20.6 மி.மீ., மழை பெய்துள்ளது. 119 அடி உயரம் உள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 82 அடியை எட்டியது. அணையில் 1,679 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 231 கனஅடி தண்ணீர் வரத்துள்ளது. மேலும், குப்பநத்தம் அணையில் 48.1 மி.மீ, மழையும், மிருகண்டாநதி அணையில் 48.4 மி.மீ., மழையும் பெய்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago