தொடர் மழை காரணமாக மோர் தானா அணைக்கான நீர்வரத்து 200 கனஅடியாக இருப்பதுடன் ஒரே நாளில் ஒரு மீட்டர் அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்தது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் பரவ லான கனமழை பெய்து வருகிறது. இதனால், முக்கிய ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை தொடங்கி நள்ளிரவு வரை பல இடங்களில் கனமழை பதிவானது.
அதன்படி, திருப்பத்தூர் மாவட் டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஆலங்காயத்தில் 29, ஆம்பூரில் 35.6, ஆம்பூர் சர்க்கரை ஆலை பகுதியில் 34, நாட்றாம்பள்ளியில் 17.2, திருப்பத்தூர் சர்க்கரை ஆலை பகுதியில் 11, வாணி யம்பாடியில் 11, திருப்பத்தூரில் 75.5 மி.மீ மழை பதிவாகியுள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணத்தில் 14.2, ஆற்காட்டில் 17.2, நெமிலியில் 30, வாலாஜாவில் 25.7, அம்மூரில் 52, சோளிங்கரில் 18, கலவையில் 32.2 மி.மீ மழை பதிவாகியுள்ளன. அதேபோல், வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் 11, மேல் ஆலத்தூரில் 20.2, காட் பாடியில் 20.3, பொன்னையில் 42.2, வேலூரில் 18.3, வேலூர் சர்க்கரை ஆலை பகுதியில் 28.2 மி.மீ மழை பதிவாகியுள்ளன.
மோர்தானா அணைக்கு நீர்வரத்து
தமிழக-ஆந்திர எல்லையில் கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே மோர்தானா அணை கட்டப்பட் டுள்ளது. 11.50 மீட்டர் உயரம் கொண்ட அணையில் சுமார் 260 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். அணை யில் இருந்து கடந்த ஜூன் மாதம் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப் பட்டது. இதனால், அணையில் நீர் இருப்பு கீழ்மட்ட அளவில் உள்ளது.இதற்கிடையில், ஆந்திர மாநில வனப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அணைக்கான நீர்வரத்து நேற்று முன்தினம் அதிகரிக்கத் தொடங் கியது. நேற்று முன்தினம் காலை 50 கன அடியாக இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கன மழை பெய்தது. அணைப் பகுதியில் மழையளவு நேற்று காலை நிலவரப்படி 60 மி.மீட்டராக இருந்தது. அதேநேரம் அணைக் கான நீர்வரத்து 200 கன அடியாக இருந்தது.
மோர்தானா அணைக்கான நீர்வரத்து மூலம் அணையின் நீர் இருப்பு நேற்று முன்தினம் 4.85 மீட்டராக இருந்தது. நேற்று காலை அது 5.75 மீட்டருடன் 115.588 மில்லியன் கன அடியாகவும் நீர் இருப்பு உயர்ந்து காணப்பட்டது.
அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர். பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பல்லி கல்லாற்றில் நேற்று காலை நீர்வரத்து காணப் பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago