கலசப்பாக்கம் அடுத்த எலத்தூர் கிராமத்தில் உள்ள - நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு :

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த எலத்தூர் கிராமத்தில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர், அங்கிருந்த விவசாயிகளிடம் நெல் கொள்முதல் தொடர்பான கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கடந்த 16-ம் தேதி முதல் செயல்படுகின்றன. நெல் கொள்முதல் செய்யப்படுவதில் ஏற்படும் முறை கேடுகளை தடுக்க, tvmdpc.com என்ற இணையதளம் மூலம் முன் பதிவு செய்யப்படுகிறது.

தமிழகத்திலேயே தி.மலை மாவட்டத்தில்தான் முதன் முறையாக இணையதள முன் பதிவு நடைமுறை அறிமுகம் செய்யப் பட்டு செயல்படுத்தப்படுகிறது. முன்பதிவு செய்யப்படுவதால், ஒரே நேரத்தில் அதிக எண்ணிக் கையில் நெல் மூட்டைகள் கொண்டு வரப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் விவசாயிகள் காத்திருக்க தேவையில்லை. மழையில் நனையாமல் நெல் மூட்டைகள் பாதுகாக்கப்படுகிறது.

தி.மலை மாவட்டத்தில் கடந்த 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 12,820 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என 2,910 விவசாயிகள் முன்பதிவு செய்துள்ளனர். இதுவரை 3,291 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

சொர்ணவாரி பருவத்தில் சாகுபடி அதிகரித்துள்ளதால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை ஏற்று 25 நேரடி நெல் கொள்முதல் நிலை யங்கள், வரும் செப்.10-ம் தேதி வரை செயல்படும் என அறிவிக் கப்பட்டுள்ளது. இது விவசாயிகளிடம் வரவேற்பு பெற் றுள்ளது. இடைத்தரகர்கள் இல் லாமல் நேர்மையான முறையில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE