ரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் 1,008 மரக்கன்றுகள் நேற்று நட்டுவைக்கப்பட்டன.
சென்னையைச் சேர்ந்த தெய்வஜோதி என்பவர் புன்னை, அத்தி, கடம்பு, மா, பலா, புளி, வாகை, மூங்கில், இலுப்பை, மகிழம், நெல்லி, தென்னை, வேம்பு, கொன்றை, புங்கை உட்பட 24 வகையான 1,008 மரக்கன்றுகளை கோயிலுக்கு நன்கொடையாக அளித்தார்.
இதையடுத்து, நெ.1 டோல்கேட் பிச்சாண்டார்கோவில் அருகே ரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 1.70 ஏக்கர் தோப்பில் அந்த மரக் கன்றுகள் நேற்று நட்டுவைக்கப் பட்டன.
ரங்கம் கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, திருச்சி-பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களின் மண்டல இணை ஆணையர் அரங்க.சுதர்சன் ஆகி யோர் மரக்கன்றுகளை நட்டு வைத்து, அந்தப் பணிகளைத் தொடங்கிவைத்தனர். மேலாளர் உமா உட்பட கோயில் பணியா ளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, கோயில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் பூஜைகள் செய்தார்.
இதுகுறித்து கோயில் அலுவலர் கள் கூறும்போது, “முதல்வரின் வழிகாட்டுதலின்படியும், மாநில இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அறிவுரையின்படியும் கோயிலுக்குச் சொந்தமான தோப்பு சமன்படுத்தப்பட்டு மரக் கன்றுகள் நட்டுவைக்கப்பட்டுள் ளன” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago