திருநெல்வேலி மாவட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் பூச்சிக் கொல்லி மருந்து ஆய்வகம் இயங்கி வருகிறது.இந்த ஆய்வகத்தின் பணி குறித்து பாளையங்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
விவசாயிகளுக்கு தரமான பூச்சி மருந்து மற்றும் களைகொல்லிகள் கிடைக்க வழி செய்வதே பூச்சி மருந்து ஆய்வகத்தின் நோக்கம். அந்தந்த வட்டார பூச்சிகொல்லி மருந்து ஆய்வாளர்களால் பூச்சிக் கொல்லி மருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மாநில அளவிலான குறியீட்டு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பின்னர், அந்த மாதிரிகள் மறுகுறியீடு செய்யப்பட்டு மாவட்டத்திலுள்ள பூச்சிக்கொல்லி மருந்து ஆய்வகத்துக்கு தர ஆய்வுக்காக அனுப்பப்படுகிறது. திருநெல்வேலி மாவட்ட பூச்சி கொல்லி மருந்து ஆய்வகத்துக்கு பெறப்படும் பூச்சிமருந்து மாதிரியானது ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்படுகிறது. பூச்சிக் கொல்லி மருந்து தரநிலைகளை உறுதிப்படுத்த, இயற்பியல் மற்றும் வேதியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆய்வு முடிவுகள் 30 நாட் களில் குறியீட்டு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆய்வின் முடிவில் தரமற்றது என்று அறியப்பட்டால் மருந்து உற்பத்தி யாளர்கள், விற்பனையாளர்கள் மீது துறை மற்றும் சட்ட ரீதியான நடவடி க்கை எடுக்கப்படும். திருநெல் வேலியிலுள்ள ஆய்வகத்தை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago