அடவிநயினார் அணையில் 25 மி.மீ. மழை :

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஏமாற்றம் அளித்து வருகிறது. பெரும்பாலான நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், மீண்டும் ஒரு சில இடங்களில் தென்மேற்கு பருவமழை பெய்தது.

நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் அடவிநயினார் அணையில் 25 மி.மீ. மழை பதிவானது.

ஆய்க்குடியில் 18 மி.மீ., குண்டாறு அணையில் 7 மி.மீ., தென்காசியில் 3.60 மி.மீ., தென்காசியில் 3 மி.மீ., சிவகிரியில் 1 மி.மீ. மழை பதிவானது.

குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 66.50 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 64.50 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 61.03 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 119.25 அடியாகவும் இருந்தது.

சேர்வலாறில் 2 மி.மீ.

திருநெல்வேலி மாவட்டம் சேர்வலாறு அணைப்பகுதியில் நேற்று காலை நிலவரப்படி 2 மி.மீ., பாபநாசம் அணையில் 1 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 87 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 573 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1304 கனஅடி தண்ணீர் திறந்துவிடப் பட்டிருந்தது.

118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 65.20 அடியாக இருந்தது. அணைக்கு 10 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 150 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. மற்ற அணைகளின் நீர்மட்டம் (அடைப்புக்குள் உச்சநீர்மட்டம்):

சேர்வலாறு- 87.47 அடி (156), வடக்குபச்சையாறு- 16.65 (50), நம்பியாறு- 11.15 (22.96), கொடுமுடியாறு- 27.75 (52.25).

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்