``மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ்தாக்கரே குறித்து மரியாதை குறைவாக மத்திய அமைச்சர் பேசியதை ஏற்க முடியாது” என்று, அம்மாநில கல்வி அமைச்சர் வர்ஷா கெயிக்வாட் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர் இங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ்தாக்கரே குறித்து, மத்திய அமைச்சர் நாராயண ரானே மரியாதை குறைவாக பேசியது ஏற்கத் தக்கதல்ல. பெரிய பதவிகளில் இருப்பவர்களை மரியாதை குறைவாக பேசுவது நமது பண்பாடல்ல. கருத்து சுதந் திரம் என்ற பெயரில் எதையும் பேசக்கூடாது. இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
மகாராஷ்டிராவில் கரோனாவை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. கிராமப்புறங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் சில மாணவர்களுக்கு நோய் தொற்று கண்டறியப் பட்டுள்ளது. நோய் பாதிப்பு குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நகர்ப்புறங்களில் பள்ளிகளை திறப்பது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் கிராமப் புறங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் சில மாணவர்களுக்கு நோய் தொற்று கண்டறியப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago