திருப்பத்தூர் நகராட்சியில் குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் பொறுத்தி தண்ணீரை உறிஞ்சுவது தெரிய வந்தால் இணைப்பு துண்டிக்கப்பட்டு, கடும் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் எச்சரித்துள்ளார்.
திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடைவைத்துள்ளவர்களில் பலர் கால்வாய் மீது மேடை அமைத்து அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். இதனால், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படு வதாக புகார் எழுந்துள்ளது.
எனவே, கடைகளுக்கு முன்பாகஉள்ள கால்வாய் மீதும், பொது இடத்தில் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் தாமாக முன்வந்து அகற்ற வேண்டும். இல்லையென்றால், நகராட்சி ஊழியர்கள் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்படும். அதற்கான செலவீன தொகையை கடை உரிமையா ளரிடமே வசூலிக்கப்படும்.
கரோனா விதிமுறைகளை வியாபாரிகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் வியாபாரம் செய்வது தெரிய வந்தால் ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப் படும்.
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இருக்கக்கூடாது. தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடை களில் விற்பனை செய்வதோ, வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதோ தெரியவந்தால் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் பொறுத்தி தண்ணீரை உறிஞ்சி எடுப்பதாக தொடர்ந்து புகார் வருகிறது. இது சட்ட விரோதமான செயலாகும். மின்மோட்டார் மூலம் குடிநீர் எடுப்பது தெரிய வந்தால் இணைப்பு துண் டிப்பதுடன், கடும் அபராதம் விதிக்கப்படும்.
திருப்பத்தூர் நகராட்சியை தூய்மையுடன் பராமரிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சேரும் குப்பைக்கழிவுகளை தூய்மைப் பணியாளர்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும்’’ என்றார்.
திருப்பத்தூர் நகராட்சியை தூய்மையுடன் பராமரிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago