வேலூர் கோட்டையில் - காவல் துறையினருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி :

By செய்திப்பிரிவு

வேலூர் கோட்டையில் மாவட்ட காவல் துறையினருக்கு பேரிடர் மீட்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் பருவமழை நெருங்குவதையொட்டி மழை, வெள்ளம் உள்ளிட்ட இடர்பாடுகளில் இருந்து பாதிக்கப்படும் பொதுமக்களை மீட்க வேலூர் மாவட்டத்தில் ஆயுதப்படை மற்றும் சட்டம், ஒழுங்கு பிரிவுகளில் பணியாற்றும் 60 காவலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வேலூர் கோட்டையில் நேற்று காலை பயிற்சி அளிக்கப்பட்டது.

இதற்காக, சென்னை கமாண்டோ பயிற்சி மைய உதவி ஆய்வாளர் எட்வர்டு தலைமையி லான குழுவினர் பயிற்சி அளித்தனர். இதில், மழை, வெள்ளம் மற்றும் தேங்கிய தண்ணீரில் மூழ்கியவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து கோட்டை அகழியில் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

மேலும், தண்ணீரில் மூழ்கியவர்கள் மற்றும் காயம் ஏற்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. புயல், மழை காலங்களில் சாலைகளில் மரங்கள் சாய்ந்தால் அவற்றை அப்புறப்படுத்துவது, இதற்காக மரங்களை வெட்டும் கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப் பட்டன.

இந்த பயிற்சி 3 நாட்கள் நடைபெற உள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்