கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அரசுப் பள்ளியில் நாமக்கல் ஆட்சியர் ஆய்வு :

By செய்திப்பிரிவு

தமிழக அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள்படி பள்ளிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என வெண்ணந்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாணவ, மாணவியர் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு வகுப்பறையில் அமர வைக்க வேண்டும். வகுப்பறையில் கிருமி நாசினி வைக்க வேண்டும். மாணவ, மாணவியர் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் ராசிபுரம் அருகே வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அலவாய்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது முகக்கவசம், கிருமி நாசினி, பல்ஸ் ஆக்ஸி மீட்டர், உடல் வெப்பநிலை பரிசோதனை கருவிகள் ஆகியவை போதுமான அளவில் இருப்பில் உள்ளனவா என ஆய்வு செய்தார். மேலும், தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும்.

இதுவரை கரோனா தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு முன்பு தடுப்பூசிகளை போட்டுக்கொண்டு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், என ஆட்சியர் அறிவுறுத்தினார்.

பள்ளி தலைமை ஆசிரியர் து.பேபிலதா, உதவி தலைமை ஆசிரியர் சாந்தி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்