திருநெல்வேலியில் மாவட்ட அதிமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாநில மகளிரணிச் செயலாளர் பா.வளர் மதி தலைமை வகித்து பேசும்போது, வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் பெண்களை அதிகளவில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, ``அதிமுக யாரையும் நம்பி வளரவில்லை. தொண்டர்களை நம்பியே கட்சி இருக்கிறது. எத்தனையோ பேர் கட்சியிலிருந்து போயிருக்கிறார்கள். ஆனால் தொண்டர்கள் எங்கும் செல்லவில்லை. பெண்களுக்கு அரசியலில் அதிக சோதனைகள், எதிர்ப்புகள் இருக்கும். அதையெல்லாம் எதிர்கொண்டு முன்னேற வேண்டும். பெண் நிர்வாகிகள் ஒவ்வொருவரும் தங்கள் பகுதிகளில் தலா 10 பெண்களை கட்சியில் உறுப்பினர் களாக சேர்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் ராஜ லெட்சுமி, மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா, அதிமுக அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதா பரமசிவன், மாவட்ட அவை தலைவர் பரணிசங்கரலிங்கம், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜான்சிராணி, முன்னாள் எம்.பி. சவுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரசியலில் அதிக சோதனைகள், எதிர்ப்புகள் இருக்கும். அதையெல்லாம் எதிர்கொண்டு முன்னேற வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago