`திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சுதந்திர தினவிழாவில் பேசும்போது, வ.உ.சியின் 150-வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்படும் என்று அறிவித்திருந்தார். இதையொட்டி திருநெல்வேலி மாவட்ட நிர்வாக த்தின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் வாசகர்க ளுக்கு வ.உ.சிதம்பரனார் இந்திய சுதந்திரத்துக்கு ஆற்றிய தியாகப் பணிகளை நினைவுப் படுத்தும் விதமாக பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, மற்றும் கவிதைப் போட்டிகளை நடத்தப்பட வுள்ளது. திருநெல்வேலி மாவட்ட மைய நூலகமும், செய்தி மக்கள் தொடர்புத்துறையும் இணை ந்து இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளன.
கல்லூரி மாணவர்களுக்கு வ.உசிதம்பரனாரின் 150-வது பிறந்தநாளும், 75-வது சுதந்திர இந்தியாவும் என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி நடைபெறவுள்ளது. கட்டுரை 4 பக்கத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். வ.உ.சிதம்பரனாரின் அரிய புகைப்படங்கள் அரிய தகவல்கள் இருந்தாலும் அதை இணைத்து அனுப்பலாம். வரும் செப்டம்பர் 2-ம் தேதி மாலை 6 மணிக்குள் மாவட்ட மைய நூலகர், மாவட்ட மைய நூலகம், வடக்கு மேட்டுத்திடல் சாலை, பாளையங்கோட்டை என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சலில் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். அல்லது மின்னஞ்சல் முகவரி dcltnvopac@gmail.com-ல் அனுப்பி வைக்கலாம்.
மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சுதேசி தந்த வ.உ.சி என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி அன்று பிற்பகல் 2 மணிக்கு மாவட்ட நூலகத்தில் நடைபெறும். இப் போட்டியில் பங்கேற்பவர்கள் மாவட்ட மைய நூலகத்தில் தங்களுடைய பெயர் களை வரும் 31-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். வாசகர் களுக்கு செக்கிழுத்த செம்ம லின் சுதந்திர சங்கொலி முழக்கம் என்ற தலைப்பில் 150 வரிகளில் கவிதை வாசிக்கும் போட்டி மாவட்ட மைய நூலகத்தில் வரும் 1-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும். இந்த போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் நூலக வேலை நேரத்தில் (காலை 9 மணி முதல் இரவு 7 மணிக்குள்) வரும் 31-ம் தேதிக்குள் மாவட்ட மைய நூலக தொலைபேசி 0462-2561712 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ளலாம். போட்டி களில் வெற்றி பெறுபவர் களுக்கு மாவட்ட நிர்வாகத்தால் வ.உ.சிதம்பர னாரின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் வரும் 5-ம் தேதி பரிசுகள் வழங்கப்படும் . இப் போட்டிகள் குறித்து தகவல்பெற மாவட்ட நூலக அலுவலரை 96008 77769 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வஉசி. குறித்த அரிய புகைப்படங்களை திருநெல்வேலி ஆட்சியர் அலுவகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு protvl@yahoo.com-க்கு அனுப்பலாம் அல்லது நேரில் வழங்கலாம். சிறந்த புகைப்படங்களை தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago