திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் பொதுமக்கள் நலன் கருதி, மானிய விலையில் மாதாந்திர கார்டு மூலம் பொதுமக்களுக்கு பால் விற்பனை செய்து வருகிறது. ஆதலால், மானிய விலையில் மாதாந்திர கார்டு மூலம் ஆவின் பால் பெறவிரும்பும் பொது மக்கள், தங்களுடைய ஆதார் கார்டு அல்லது குடும்ப அட்டை நகலுடன் தங்களுக்கு தேவைப்படும் பாலின் அளவு விவரங்களுடன் திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தை அணுகலாம். ஏற்கனவே, மாதாந்திர கார்டு மூலம் ஆவின் பால் பெறும் நுகர்வோர்கள் தங்கள் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். தொலைபேசி எண்: 0462 255 2004, கைப்பேசி எண்: 75989 40710.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago